வாழையடி வாழையாய் மனிதனை வாழவைக்கும் வாழை

வாழை – இதன் அனைத்து பகுதிகளும் மனிதர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது. ஊட்டச்சத்து மிக்க உணவாகவும் அறியப்படுகிறது. வாழை தொடர்ந்து சந்ததிகளை உருவாக்கும் பல்லாண்டு தாவரம் ஆகும். நடவு செய்த பின்பு வருகின்ற முதல் சுற்று பயிர் முதல் பயிர் நிலை எனப்படுகிறது. மறுதாம்பு பயிரானது அறுவடைக்கு பின்பு தோன்றும் பக்க கன்று அல்லது தொடர் கன்று ஆகும். இரண்டாவது சுற்று கன்று முதல் மறுதாம்பு பயிர் என‌வும், மூன்றாவது சுற்று கன்று இண்டாவது மறதாம்பு பயிர் எனப்படுகின்றது

நடவுக்கு ஏற்ற காலம் :

ஆடிப் பட்டமும், கார்த்திகைப் பட்டமும் நடவுக்கு ஏற்றவை. தண்ணீர் தேங்காத எல்லா மண்வகைகளிலும் சாகுபடி செய்யலாம் என்றாலும், சிறப்பான மண் செம்மண்தான். தேர்வு செய்த நிலத்தை இரண்டு சால் உழவு செய்து, ஏக்கருக்கு 10 டன் என்ற கணக்கில் எருவைக் கொட்டிக் கலைத்து… ஒரு சால் உழவு செய்ய வேண்டும்.

தட்பவெப்பம் :

நீர் அதிகம் கிடைக்கும், நிலநடுக்கோட்டுப்பகுதிகளில் வாழை நன்றாக வளரும். வெப்பநிலை 20 – 30 °C இருப்பது நல்லது.
10 °Cக்கும் கீழே வாழை வளர்ச்சி நின்றுவிடும். உறைபனி வாழை மரத்தைக் கொன்று விடும். ஆனால், நிலத்தடிக் கிழங்கு சாதாரணமாக உறைபனியைத் தாங்கும். மற்றைய காரணிகளை விட, காற்று தான் வாழைப்பயிரினர முக்கிய இடர் (பிரச்சினை).
மணிக்கு 30 – 50 கி.மீ வேகமான காற்று, வாழை இலைகளையும்,
சில சமயம் வாழைக்குலையையும் உடைத்துவிடும்.

நடவு செய்யும் முறை :

நிலத்தை ஈரப்படுத்தி, ஆறரை அடி இடைவெளியில் மண்வெட்டி கொண்டு முக்கால் அடி ஆழத்துக்குக் குழி எடுக்க வேண்டும்.
ஏக்கருக்கு ஆயிரம் குழிகள் வரை எடுக்க முடியும். இரண்டு முதல் மூன்று மாத வயதுள்ள “ஈட்டி” வாழை இலைக்கன்றுகளைத் தேர்வு செய்ய வேண்டும், அவற்றில் கிழங்கில் இருந்து அரை அடி உயரத்துக்குத் தண்டுப் பகுதியை மட்டும் விட்டு மீதியை வெட்டி நீக்க வேண்டும். 200 லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ சூடோமோனஸ், ஒரு கிலோ அசோஸ்பைரில்லம், 10 லிட்டர் பஞ்சகவ்யா ஆகியவற்றைக் கலந்து, அதில் கிழங்கை முக்கி எடுத்து 3 மணி
நேரம் நிழலில் உலர்த்தி, விதைநேர்த்தி செய்து குழிகளில் நட வேண்டும். நடவு செய்த நான்கு மாதங்கள் வரை வாழைக்கு இடையில் ஊடுபயிராகக் கத்திரி, வெண்டை, நிலக்கடலை மாதிரியான குறைந்த வயதுடைய பயிர்களை சாகுபடி செய்யலாம்.

அறுவடை
வாழை காய் நுனியில் பூ உதிரும் காயை சுற்றியுள்ள வரும்புகள் மறைந்து மினுமினுப்பு கொடுக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக தார் ஈன்று சரியாக 90 நாட்கள் கடந்துவிட்டால் வெட்டும் பருவம் என எடுத்துக் கொள்ளலாம்…

தாரை மட்டும் வெட்டிவிட்டு, தாய் மரத்தை அப்படியே விட்டு விட வேண்டும். அதிலுள்ள சத்துக்களை எடுத்துக்கொண்டு, பக்கக்கன்றுகள் நன்றாக வளரும். தொடர்ந்து, இடுபொருட்களைக் கொடுத்து பாசனம் செய்து வந்தால், அடுத்த 9 மாதங்களில் மீண்டும் பலன் எடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *