ரோஜா மலர் சாகுபடி .. வெளிநாடுகளில் விற்பனையாகும் இந்திய மலர்கள்

Plantation of roses in greenhouses
ரோஜா :
ரோஜா ஒரு தனித்த வடிவம் கொண்ட புதர்களில் ஒன்றாகும். ரோஜா என்ற பெயர் ரோஸா அல்லது ரோஸ் என்ற வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்டதாகும், இது தோற்றம் கொண்ட இடத்தின் பெயரைக் காட்டுகிறது. இந்த வகை மலர்களில் உலகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன.
ரோஜாவில் பல வகையான பூக்களும், பலவித வண்ணங்களும் உண்டு. இதன் தண்டு பகுதி பெரும்பாலும் கூரிய முட்கள் கொண்டதாக இருக்கும்.
பெண்கள் பூவினை தலையில் சூடிகொள்ளவும், மாலையாக கோவில் பூஜையிலும் பயன்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் தற்போது விவசாயிகள் ரோஜா சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர்.
வெப்பமான பகுதியில் சாகுபடி?
ரோஜாவை பொறுத்தவரை குளிர் பிரதேசதங்களில் நன்கு வளரும். அதேசமயம் மற்ற பகுதிகளிலும் வளரும் தன்மை உண்டு. அதிகமான வெப்பம் இருக்கும் கோடை காலத்தில் அதன் வளர்ச்சியும், மகசூலும் குறைவாக இருக்கும். மற்றபடி வெப்பம் உள்ள பகுதியிலும் ரோஜாவை பயிரிட முடியும்.
கடுமையான கோடை வெயில் காலத்தில் ரோஜா மலர்களின் மகசூல் சற்று குறைவாக இருக்கும். அதேசமயம் குளிர்காலங்களில் மகசூல் அதிகமாக இருக்கும். ஆண்டுதோறும் வருவாய் ஈட்ட முடியும் என்பதால் சராசரி லாபம் கிடைக்கும். திருமண சீசன், விழாக்காலங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய வாய்ப்பு இருப்பதால் ரோஜாவை பொறுத்தவரை நல்ல விலை கிடைக்கும். உள்ளூரிலேயே தேவை இருப்பதால் இங்கேயே விற்பனை செய்து விடுகிறேன்.
நடவு முறைகள்:
1க்கு 0.5 அளவு குழிகளில் மண் புழுஉரம் இரண்டு கிலோ, வேப்பம்பிண்ணாக்கு அரை கிலோ, சிறிது சுண்ணாம்பு தூள் கலந்து இட்டு பதியன் குச்சிகளை நடவேண்டும். குழிகளை சுற்றி மண் இருக்கும் அளவிற்கு சுற்றிலும் நன்கு மிதித்து விட வேண்டும்.
ரோஜா செடி நட்ட பத்தாவது நாள் முதல் துளிர்கள் வர ஆரம்பிக்கும். பின்னர் மொட்டுகள் தோன்ற ஆரம்பித்து விடும். ரோஜாவை அதிகமாக தாக்கும் நோய்கள், சாறுஉறிஞ்சும் பூச்சி மற்றும் மாவுப் பூச்சி. கற்பூர கரைசல் தொடர்ந்து வாரம் ஒரு முறை தெளித்தால் எந்த பூச்சி தாக்குதலும் இருக்காது. அளவிற்கு அதிகமாக துளிர் மற்றும் மொட்டுகள் தோன்றும். மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் வேரில் அளிப்பதன் மூலமாக அதாவது பாசன நீரில் கலந்து விட்டால் நல்ல வளர்ச்சியை காணலாம். தினமும் பூக்கள் பறிக்க வேண்டும். பூ பூப்பது நின்ற உடன் கவாத்து செய்வது மிகவும் அவசியம். மண் தன்மைக்கு ஏற்ப தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது அவசியம்.
பயன்கள் :
ரோஜா இதழ்களை சேகரித்து நிழலில் உலர்த்தி, நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி உட்கொண்டால் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் நீர்க்கட்டு சரியாகும். வாய்ப்புண்ணும் விரைவில் குணமாகும். ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து காலை, மாலை ஆகிய இருவேளை அப்படியே உட்கொண்டுவர சீதபேதி இரண்டொரு நாளில் குணமாகிவிடும்.
புண்கள் குணமாக ரோஜா பூ இதழ்களிலிருந்து குடிநீர் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தைக் கழுவ வேண்டும். இந்நீரை கொண்டு வாய் கொப்பளிக்க வாய்ப்புண் குணமாகும். ரோஜா இதழ்களை சேகரித்து தேனிலோ அல்லது சர்க்கரை பாகிலோ ஊற வைத்து தினமும் சாப்பிட்டுவர இதயம் வலிமை பெறும். மலச்சிக்கல் பிரச்சனை தீரும். ரோஜா மலரின் சாற்றை ஒற்றைத் தலைவலிக்கு பயன்படுத்தலாம். தலைவலி எந்த பக்கம் இருக்கிறதோ, அதற்கு நேரெதிர் நாசி துவாரத்தில் இதன் சாற்றை 2 துளிவிட உடனே தலைவலி மறைந்துபோகும்.