புனிதமான தர்பை புல்லின் ஆன்மீகமும் ஆரோகியாமும்

ஹோம குண்டங்களில், யாக சாலையில் இருந்து பிம்பத்திற்கும், கலசங்களுகும் மந்திர ஒலிககளை கடத்தி சக்தியை அளிக்கும்.

நான்கு பக்கமும் தர்பை புல்லை வைப்பது, அந்த குண்டங்களை பாதுகாக்கும் அரணாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

இறைவழிபாடு, ஜபம், ஹோமம், தியானம், பித்ரு தர்ப்பணம், பிராணயாமம் முதலிய காரியங்களில், கையில் பவித்ரம் அணிந்து கொள்ளாமல் செய்வது பலனை தராது. விஷேஷ காரியங்கள் நடத்தும் போது வலது கை மோதிர விரலில் பவித்திரம் என தர்பை புல்லை அணிவிப்பார்கள் மோதிர விரல் மூளையுடன் சம்பந்தப்பட்டது .

ஆகவே தர்பை பவித்ரம் போடும் பொது, பிரபஞ்ச சக்தி, விரல் மூலம் மூளைக்கு செல்கிறது; உடலிலும் பரவும். கிரகண காலத்தில், அமாவாசையிலும் தர்பைக்கு வீரியம் அதிகமாகும், ஆகவே தான் கிரகண காலத்தில், உணவு பண்டங்களில் கிரகண சக்தி தாக்காமல் இருக்க தர்பையை போடுவது வழக்கம்.

தர்பையை தேவ காரியங்களுக்கு கிழக்கு நுனியாகவும், பித்ரு காரியங்களுக்கு தெற்கு நுனியாகவும் பயன்படுத்த வேண்டும், 
தர்பை, உஷ்ண விரீயமும் அதிக வேகமும் உடையது. பஞ்சலேங்களில், தாமிரத்துக்கு, மின்சாரத்தை கடத்தும் சக்தி உண்டு, அதே சக்தி, தர்பைக்கும் உண்டு. எல்லா ஆசனங்களை காட்டிலுமும், தர்பாசனத்தில் அமர்ந்து பூஜை செய்வது மிகவும் உயர்ந்த பலனை தரும். அசுப காரியங்கள் ஒரு தர்பையாலும், சுப காரியங்களுக் இரண்டு தர்பைகளாலும், பித்ரு காரியங்களாலும், தேவ காரியங்களுக்கு 5 தர்பைகளாலும், சாந்தி கர்ம காரியங்களுக்கு 7 தர்பைகளாலும் மோதிரம் முடியவேண்டும்.

தர்பை எல்லா இடங்களிலிலும் வளராது. மிகவும் தூய்மையான இடங்களில்தான் வளரும். தர்பை கதிர்வீச்சினை எதிர்க்கும் சக்தி கொண்ட தாவரமாகும். எனவே கிரஹன காலங்களில் உணவு பொருட்களில் கதிர்வீச்சின்றி காக்க, தர்பையை பயன்படுத்துகிறோம். தர்ப்பைப்புல் இருக்கும் இடத்தில் துர்சக்திகளின் நடமாட்டம் இருக்காது.

தர்பையில்  மருத்துவ குணங்கள் பல உள்ளன. இதன் ஒரு சில துண்டுகளை குடிநீர்ப் பானையில் போட்டுவைத்து, அந்த நீரை அருந்தினால் கடும் வெயிலின் தாக்கம் குறையும். சூரிய, சந்திர கிரகணத்தின்போது உணவுப் பொருள்களிலும், குடிநீரிலும் சிறிது தர்பைப் புல்லைப் போட்டு வைத்தால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். மேலும், தர்பைப் புல்களின் காற்றுபட்ட இடங்களில் தொற்றுநோய் ஏற்படாமலிருக்கும் என்பதால், இதை கிராமத்து வீட்டு வாசல்களில் கொத்தாகக் கட்டி தொங்கவிட்டிருப்பார்கள். 

இந்தப் புல் இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்டது. குடிநீரில் தர்பைப் புல்லை துண்டாக்கிப் போட்டு குடித்தால் சர்க்கரைநோய் கட்டுக்குள் இருக்கும். உடல் சூடு காரணமாக அடர் மஞ்சள் நிறத்தோடும், எரிச்சலோடும் சிறுநீர் கழிப்பவர்கள் கையளவு தர்பைப் புல்லை எடுத்து சுடுநீரில் காய்ச்சி ஆறவைத்து, வடிகட்டிக் குடித்தால் அந்த உபாதைகள் நீங்கும்.

சிறுநீரகம், கல்லீரல், குடல்புண், வாய்ப்புண் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் தர்பைப் புல் கொண்டு காய்ச்சிய நீரைக் குடித்தால் அந்தப் பிரச்னைகள் நீங்கும். அதோடு, சிறுநீரகக் கற்களையும் வெளியேற்றும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. ஆண்டு முழுவதும் வைத்துப் பயன்படுத்தும் ஊறுகாய், வற்றல், வடகம் போன்றவற்றில் சில தர்பைப் புற்களைப் போட்டுவைத்தால் அவை கெட்டுப்போகாமல் இருக்கும். அவற்றின் சுவையையும் மணத்தையும் அதிகரிக்கும்.

தர்பைப் புல்லால் செய்யப்படும் பாய் விரிப்பில் படுத்து உறங்கினால் உடல்சூடு தணியும்; மன உளைச்சல் நீங்கும்; நல்ல உறக்கம் கிடைக்கும்; ஆரோக்கியம் நீடிக்கும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *