உடல் நலத்தை விருத்தி செய்யும் அரைக்கீரை!

உடல் ஆரோக்கியத்தில் கீரைகள் முக்கிய பங்குவகிக்கின்றன. தினசரி ஏதாவது ஒரு வடிவத்தில் கீரைகளை சாப்பிடவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். கீரைகளில் பலவகைகள் உள்ளன. ஒவ்வொரு கீரையும் ஒவ்வொரு வடிவைத்தில் மனிதர்களுக்கு நன்மை தருகின்றன.

பித்த நோய்கள்

அகத்திக் கீரைக்கு பித்தம் தொடர்பான குணமாகும், ஜீரணசக்தி உண்டு பண்ணும். இழந்த பலத்தை மீட்டுத்தரும். இது மலத்தை இளக்கி வெளியேற்றும். சிறிதளவு வாயுவை உண்டு பண்ணும். உயிர்ச்சத்து ‘ஏ’ மற்றும் சுண்ணாம்புச்சத்து அதிக அளவில் இருப்பதால் உடல் வளர்ச்சியையும், கண்பார்வை தெளிவையும் எலும்புகளுக்கும் பலம் கொடுக்கும். ஆரைக் கீரைக்கும் பித்தம் தொடர்பான கோளாறுகளை போக்கும். அளவு மீறிப் போகும் சிறுநீரை கட்டுப்படுத்தி சமநிலைக்கு கொண்டு வரும்.

பொன் போன்ற மேனி

சருமம் பொன்போல பிரகாசிக்க தினசரி பொன்னாங்கண்ணி கீரையை சூப் வைத்து சாப்பிடலாம். பொன்னாங்கண்ணி கீரையை கடைந்து உணவுடன் நெய் சேர்த்து அருந்த உடல் வலுப்பெறும்.

சிகப்பு பொன்னாங்கண்ணி கீரையை பூண்டு சேர்த்து வதக்கி சாப்பாட்டுடன் சாப்பிட்டு வந்தால் மூலநோய் அறுவைசிகிச்சை இல்லாமலேயே குணமாகும். வாய்ப்புண், தொண்டைப்புண் நீங்கும்.

நரைமுடி அகலும்

முளைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இளமையில் தலைமுறை நரைக்காமல் இருக்கும். கரிவேப்பிலையை நாள்தோறும் உணவில் ஏதாவது ஒரு வடிவில் சேர்த்துக் கொண்டால் உடலின் இளமைத்தோற்றம் நிலைத்துநிற்கும்.

தாது விருத்தியாகும்

அரைக்கீரை அனைத்து பகுதிகளிலும் எளிதாக கிடைக்கும். இதை பருப்புடன் சேர்ந்து கடைந்து சாப்பிடலாம். இந்த கீரை இரத்தத்தை உற்பத்தி செய்யும். கபத்தை உடைத்து வெளியேற்றும். வாத சம்பந்தமான வியாதி தணிக்கும். நரம்பு வலி, பிடரிவலியை எளிதில் போக்கவல்லது. இது தாதுவை விருத்தி செய்யும்.

எலும்பு வளர்ச்சி

புதினா கீரையில் இரும்புச்சத்து இருப்பதால் இரத்தத்தை சுத்தம் செய்து புதிய இரத்தத்தை உண்டு பண்ணும். பற்களை கெட்டிப்படுத்தும், எலும்புகளை வளரச் செய்யும். புதினாவை நசுக்கி போட்டு கஷாயம் வைத்து சாப்பிட்டால் இளமையுடன் வாழலாம். அரை சங்கு புதினாக் கீரையை குழந்தைகளுக்கு கொடுக்க கபம் நீங்கும். கொத்தமல்லிக்கீரையை துவையல் அரைத்து சாப்பிட பித்தம் குணமாகும்.

வயிற்றுப் புண் குணமாகும்

பசலைக்கீரை சாப்பிட நீர் கடுப்பு, வெள்ளை வெட்டை நீங்கும். மிளகு தாக்காளி கீரைக்கு வயிற்றுப் புண்ணை ஆற்றும் சக்தி உள்ளது. பருப்பும், தேங்காயும் போட்டு காரம் சேர்க்காமல் சமைத்து சாப்பிட்டால் குடல்புண், வாய்ப்புண் ஆறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *