விவசாயம், கால்நடை, பால்வளம், மீன்வளம் உள்ளிட்ட துறைகளுக்கான திட்டங்கள் வெளியிட்டது மத்தியஅரசு

ரூ.20 லட்சம் கோடி பொருளாதார சுயசார்பு திட்டம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3-ம் கட்ட அறிவிப்புகளை வெளியிட்டார். இன்று 11 அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ள நிலையில் விவசாயம், கால்நடை, பால்வளம், மீன்வளம் உள்ளிட்ட துறைகளுக்கான திட்டங்கள் இன்று வெளியிடப்படுகின்றன.

 • இந்தியாவில் பெரும்பாலோனோர் விவசாயத்துறையை சார்ந்தே உள்ளனர். நம் நாட்டு விவசாயிகள் அனைத்து சவாலான சூழல்களிலும் பணியாற்றியுள்ளனர்.
 • இன்று வெளியிடப்படும் 11 அறிவிப்புகளில் 8 அறிவிப்புகள் விவசாய உள்கட்டமைப்பு சார்ந்தவை.
 • வேளாண்துறை சார்ந்த 11 நிவாரண திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு
 • ஊரடங்கு காலத்தில் உற்பத்திப் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்வதற்கான ரூ.74,300 கோடி வழங்கப்பட்டுள்ளது.
 • பீமயோஜனா திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.6,400 கோடி நிலுவைத் தொகை கொடுக்கப்பட்டுள்ளது.
 • ஊரடங்கு காலத்தில் விவசாயிகளிடம் இருந்து 560 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
 • விவசாய கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு
 • பதிவு செய்யப்பட்ட இறால் பண்ணைகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த சலுகைகள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு
 • சிறிய உணவு தயாரிப்பு நிறுவனங்கள் மேம்பாட்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. ரூ.10 ஆயிரம் கோடி நிதி மூலம் 2 லட்சம் சிறு நிறுவனங்கள் பயனடையும்.
 • இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் வாரியாக நிதி ஒதுக்கப்படும்.
 • தமிழகத்தில் மரவள்ளிக் கிழங்கு, ஆந்திராவில் மஞ்சள் நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
 • கடல் மீன்பிடி திட்டங்களுக்கு ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: அதில் மீன்பிடி துறைமுகம், மீன்சந்தைகளின் உள்கட்டமைப்புகளுக்கு ரூ.9,000 கோடி ஒதுக்கீடு
 • கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் மூலம் ஏற்படும் நோய்களுக்கான சிகிச்சைக்காக ரூ.13,343 கோடி ஒதுக்கீடு: 53 கோடி கால்நடைகளுக்கு 100% தடுப்பூசியை உறுதி செய்ய நடவடிக்கை

கர்நாடகாவில் ராகி அதிகம் விளைகிறது, வடகிழக்கு மாநிலங்களில் மூங்கில், பழங்கள், தெலுங்கானாவில் மஞ்சள், ஆந்திராவில் மிளகாய், காஷ்மீரில் குங்குமப்பூ, தமிழகத்தில் மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு வகையான விளைபயிர்கள் புகழ் பெற்றவை. இவற்றை கிளஸ்டராக மாற்ற, ரூ.10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தந்த கிளஸ்டர் பகுதிகள் மேம்படுத்தப்படும்.

விவசாயத்துறை கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *