சிறு, குறு நிறுவனங்களுக்கான சலுகை மழை அறிவித்தார் நிர்மலா சீதாராமன்

பிரதமர் மோடி நேற்று அறிவித்த 20 லட்சம் கோடி நிதி பேக்கேஜ் பற்றிய விளக்கத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

பிரதமர் நேற்று ஹிந்தியில் கூறிய Atma-nirbhar Bharat Abhiyan என்ற வார்த்தைக்கு தமிழில் சுய சார்பு பாரதம் என்று அர்த்தம். இதனால் நாம் உலக நாடுகளிலிருந்து தனித்துவிட மாட்டோம். சுய சார்பு பாரதம் என்ற பெயரில் ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

‘ஆத்மனிர்பார் பாரத்தின் ஐந்து தூண்கள் இவைதான்- பொருளாதாரம், உள்கட்டமைப்பு, அமைப்பு, துடிப்புள்ள மக்கள் மற்றும் தேவை. பிரதமர் கூறியதை போல, நாம் என்95 மாஸ்க், பிபிஇ கிட்கள் தலா 2 லட்சம் தயாரித்துள்ளோம். நம்மிடம் திறமையுள்ளது. ஆத்மனிர்பார் என்பது இந்தியாவை தனிமைப்படுத்துவது அல்ல, இது உள்ளூரை உலகிற்கு எடுத்துச் செல்வது. இதற்கு ஏற்ப, நமது கவனம் நிலம், தொழிலாளர், பணப்புழக்கம் மற்றும் சட்டம் ஆகியவற்றில் இருக்கும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார். இதன் மூலம், தொழிலாளர் சட்டங்களில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்பதை அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

நேரடி பணப் பரிமாற்றம், மைக்ரோ இன்ஷூரன்ஸ் திட்டங்கள், பி.எம். அவாஸ் யோஜனா, பி.எம். உஜ்வாலா யோஜனா, ஸ்வச் பாரத் மற்றும் ஆயுஷ்மான் பாரத் ஆகியவை அரசின் முக்கிய சீர்திருத்தங்கள், அவை ஏழைகளுக்கு பெரிய அளவில் பயனளித்தன. ஏழைகளுக்கு இதுவரை ரூ18 ஆயிரம் கோடி மதிப்பிலான 48 லட்சம் டன் உணவு தானியம் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் அடுத்தடுத்த பொருளாதார செயல் திட்டங்கள் குறித்து அறிவிக்கப்படும். ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும், தானியங்கள் வழங்கப்படும்.

று குறு நிறுவனங்களுக்கு ரூ .3 லட்சம் கோடி மதிப்புள்ள பிணை இல்லாத கடன்கள் வழங்கப்படும். 2020ம் ஆண்டு அக்டோபர் 31 வரை இந்த கடன் கிடைக்கும். இது 4 வருடங்களுக்கான கடன். ஓராண்டுக்கு, கடன் தவணை கிடையாது. அதாவது அந்த ஓராண்டுக்கு அசல் வசூலிக்கப்படாது. அதிகபட்சம் ரூ.25 கோடி கடனுள்ள நிறுவனங்கள் இந்த கடனை பெற முடியும். அதேபோல அதிகபட்சமாக ரூ.100 கோடி வரை வர்த்தகம் செய்வோர் வரை, இந்த சலுகையை பெற முடியும்.

இதனால், நாட்டில் உள்ள 45 லட்சம், சிறு குறு தொழில் நிறுவனங்கள், பணிகளை துவங்க முடியும். வேலைவாய்ப்பு பாதுகாக்கப்படும். இதற்காக ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்படும். இன்று 15 வகை அறிவிப்புகள் வெளியிட உள்ளேன். அதில் 6 அறிவிப்புகள் சிறு, குறு தொழில்கள் தொடர்பானது. 2 விஷயங்கள், தொழிலாளர் நிதி சார்ந்தது, 2 சிறு தொழில்களுக்கு மற்றும் 3 விஷயங்கள் வரி சார்ந்தவையாக இருக்கும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *