நாட்டின் பொருளாதாரத்தை மீட்க 20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டம் மத்திய அரசு அறிவிப்பு

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கச் சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை வகுக்க உள்ளது மத்திய அரசு. இதற்க்கான முக்கியமான அறிவிப்பைச் செவ்வாய்க்கிழமை இரவு மோடி அறிவித்தார்.

சமீப காலத்தில் அறிவிக்கப்பட்ட முக்கியத் துறைகளுக்கான ஊக்குவிப்பு மற்றும் ரிசர்வ் வங்கி அறிவிக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளும் இந்த 20 லட்சம் கோடி ரூபாய் திட்டத்தில் அடங்கும் என மோடி தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டம் Aatmanirbhar Bharat என்ற பெயரில் இயங்க உள்ளதாகவும் மோடி அறிவித்துள்ளார்.

இதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் பல்வேறு மாற்றங்கள் உடன் 4வது முறையாக மீண்டும் ஊரடங்கும் நடைமுறைப்படுத்த உள்ளதாகவும், இதுகுறித்த விரிவான அறிவிப்புகள் மே 18ஆம் தேதி அறிவிக்கப்படும் என மோடி அறிவித்துள்ளார்.

இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் அடுத்த சில நாட்களில் நடைமுறைக்கு வரும் என்றும், இதை விளக்கமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை அறிவிப்பார் என்றும் பிரதமர் அறிவித்தார். இத்திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் கொரோனவால் வர்த்தகத்தையும், வருவாயும் இழந்து நிற்கும் பல ஆயிரம் நிறுவனங்களை மீட்க உதவும்.

இன்னும் சில நிறுவனங்கள் திவால் ஆகும் நிலையிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது,மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய் என்பது இந்திய ஜடிபி-யில் 10 சதவீதம், இந்தச் சிறப்புப் பொருளாதார மீட்பு திட்டத்தில் நிலம், வேலைவாய்ப்பு, பணப்புழக்கம் மற்றும் சட்டவிதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். கிட்டத்தட்ட இந்த 20 லட்சம் கோடி ரூபாய் என்பது நாட்டின் நிகர வரி வருமானம். இந்தப் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் மூலம் முடங்கியிருக்கும் வர்த்தகச் சந்தை மீண்டு எழுவதற்கும், புதிய முதலீடுகளை ஈர்க்கவும், மேக் இன் இந்தியா திட்டத்தை வலிமைப்படுத்துவதற்குப் பெரிய அளவில் உதவும் எனத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *