இரண்டு லட்சத்தை நெருங்கும் உயிரிழப்பு; இது தொடக்கம்தான்… நீண்ட காலம் நிலைத்து இருக்கும்: எச்சரிக்கும் WHO

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை நெருங்குகிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1.85 லட்சம் பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 27 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 56 லட்சம் பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

 • இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,471 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 652 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 3,960 பேர் குணமடைந்தனர்.
 • தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 662 ஆக அதிகரித்துள்ளது.
 • அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 47,663 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 848,735 ஆக அதிகரித்துள்ளது.
 • இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 25,085ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 187,327 ஆக உயர்ந்துள்ளது.
 • ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 21,717 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 208,389 ஆக அதிகரித்துள்ளது.
 • பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 21,340 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 159,877 ஆக அதிகரித்துள்ளது.
 • பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 18,100 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 133,495 ஆக உயர்ந்துள்ளது.
 • ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,391 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85,996 ஆக அதிகரித்துள்ளது.
 • பெல்ஜியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,262 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41,889 ஆக அதிகரித்துள்ளது.
 • ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,315 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 150,648 ஆக அதிகரித்துள்ளது.
 • நெதர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,054 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,842 ஆக அதிகரித்துள்ளது.
 • சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,632 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,798 ஆக அதிகரித்துள்ளது.
 • துருக்கியில் 2,376 பேரும், சுவிட்சர்லாந்தில் 1,509 பேரும், பிரேசில் நாட்டில் 2,924 பேரும், சுவீடன் நாட்டில் 1,937 பேரும் கோரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
 • கனடாவில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,974 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பல நாடுகளில் பலி எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டு வருகிறது.

கொரோனா வைரஸ் நம்முடன் நீண்டகாலம் நிலைத்தே இருக்கும் என்றும், இது மிக மோசமான விளைவுகளையும் ஆபத்தையும் ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பூமியில் இன்னமும் நீண்டகாலம் நிலைத்துதான் இருக்கும். அது மிகவும் மோசமான ஆபத்தை ஏற்படுத்தும். பெரும்பாலான நாடுகளில் கொரோனா தொற்று நோய் என்பது தொடக்க நிலையில் தான் இருக்கிறது. கொரோனா விவகாரத்தில் நாம் பயணிக்க வேண்டிய தொலைவு வெகு அதிகம்
என்று உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *