ஜூன் 1 முதல் நாள்தோறும் ஏசி பெட்டிகள் அல்லாத 200 ரயில்கள் இயக்கப்படும்

Ahmedabad: Migrant workers prepare to board the Sabarmati Express in view of protests which broke out over an alleged rape of a 14-month-old girl, in Ahmedabad, Monday, October 8, 2018. (PTI Photo) (PTI10_8_2018_000158B)

ஜூன் 1-ந் தேதி முதல் ஏசி பெட்டிகள் அல்லாத 200 ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். கொரோனா லாக்டவுன் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்ல சரக்கு ரயில்கள் முழுவீச்சில் இயங்கின. பயணிகள் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.

மே 1-ந் தேதி முதல் இடம்பெயர் தொழிலாளர்களுக்காக மாநில அரசுகளின் ஏற்பாட்டில் சிறப்பு ரயில்கள் நாடு முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சிறப்பு ரயில்கள் அனைத்தும் ஏசி பெட்டிகள் கொண்டவை.

இந்நிலையில் ஜூன் 1-ந் தேதி முதல் ஏசி பெட்டிகள் அல்லாத 200 ரயில்கள் நள்தோறும் இயக்கப்படும் என்ரு மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். இந்த ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்து பெற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 200 ரயில்களும் வழக்கமான கால அட்டவணைப்படி இயக்கப்பட உள்ளதாகவும் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

டெல்லிக்கு சிறப்பு ரயில்

இந்த நிலையில் சென்னையில் இருந்து டெல்லிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. டெல்லியில் இருந்து 21ம் தேதி முதலும், சென்னையில் இருந்து 23ம் தேதி முதலும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.சென்னையில் இருந்து புதன் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 6:35க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10:30 சிறப்பு ரயில் டெல்லி சென்றடையும்.

மறுமார்கத்தில் டெல்லியில் இருந்து திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் மாலை 4மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 8:40க்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.மேற்கொண்ட சிறப்பு ரயில்கள் விஜயவாடா, வாரங்கல், நாக்பூர், போபால், ஜான்சி மற்றும் ஆக்ரா ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட இந்த ரயில்களுக்கு ராஜதானி ரயிலுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் வசூலிக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *