கர்நாடகாவில் பேருந்து மற்றும் ரயில் சேவைகளுக்கு அனுமதி: முதல்வர் எடியூப்பா அறிவிப்பு

கர்நாடக மாநிலத்தில் பேருந்து மற்றும் ரயில் சேவைகளுக்கு அனுமதி அளித்து முதல்வர் எடியூப்பா உத்தரவிட்டுள்ளார். மாநிலத்தில் 30 பயணிகளுடன் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சலூன் மற்றும் அனைத்து விதமான தனியார் கடைகளும் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, ஆனால் அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் முதல்வர் எடியூப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் 1147 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இது இந்தியாவின் பாதிப்பில் 1.28% மட்டுமே, இதுவரை 37 பேர் பலியாகி உள்ளனர், 509 பேர் குணமடைந்தது வீடு திரும்பியுள்ளனர். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது கர்நாடகாவில் பாதிப்பு குறைவாகவே உள்ளது. எனவே கர்நாடக அரசு ஊரடங்கு சமயத்தில் பல்வேறு தளர்வுகளை வரிசையாக அமல்படுத்தி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *