ஆப் மூலம் தொடங்கியது மதுபான விற்பனை ..

கேரளாவில் தான் இந்த முறை தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் BevQ ஆப் மூலம் VQM என்ற சிஸ்டம் முறையில் 67 நாட்களுக்கு பின் மதுபானங்கள் விற்பனை இன்று தொடங்கி உள்ளது. BevQ ஆப் மூலம் VQM என்ற சிஸ்டம் முறையில் (virtual queue management system) பதிவு செய்து இ-டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படுகிறது. இந்த செயலி மூலம் ஒருமுறை மதுபானம் வாங்கினால் 5 நாட்களுக்கு பிறகே மறுபதிவு செய்யும் வகையில் BevQ ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.
BevQ ஆப் இது ஒருபுறம் எனில் கேரளாவில் ஆன்லைனில் மது வாங்க BevQ, என்ற ஆப்பை பிளே ஸ்டோரில் நேரலைக்கு செல்ல கூகுள் அனுமதி அளித்துள்ளது. இதை கேரள மாநில பீவரேஸ் கார்ப்பரேஷன் (பெவ்கோ) வழங்கியுள்ளது. இந்த அரசின் நிறுவனம் தான் மதுபானங்களை விற்பனை செய்ய உள்ளது. மதுபானக் கடைகளில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக கேரள அரசு உருவாக்கி உள்ளது.
கேரளாவில் மதுபான விற்பனைக்கு ஈ-டோக்கன்களை உருவாக்க பெவ்க்யூ முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. இன்று 9வியாழக்கிழமை) முதல் கேரளாவில் மது விற்பனை தொடங்கியுள்ளது. தொற்றுநோய்களுக்கு மத்தியில் மதுபானக் கடைகளுக்கு வெளியே கூட்டத்தை நிர்வகிக்க டெல்லி அரசு அறிமுகப்படுத்திய இ-டோக்கன் முறையைப் போலவே, பெவ்க்யூ, தனது வாடிக்கையாளர்களை ஜி.பி.எஸ் இருப்பிடத்தின் அடிப்படையில் அருகிலுள்ள விற்பனை நிலையங்களுக்கு வாடிக்கையாளர்களை அனுமதிக்கிறது.
ஒரே நேரத்தில் 35 லட்சம் பேர் முன்பதிவு செய்ய முடியும் என்கிறார்கள். இந்த ஆப் மூலம் காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை மதுபானங்கள் வாங்க முடியும். இப்போதைக்கு ஆப் பிளே ஸ்டோரில் இல்லை. விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.