லாக்டவுன் 4 மிகவும் மாறுபட்டதாக இருக்கும் பிரதமர் மோடி அறிவிப்பு

New Delhi, Nov 09 (ANI): Prime Minister Narendra Modi addresses the nation, in New Delhi on Saturday. (ANI Photo)

இந்தியாவில் அமல்படுத்தப்பட உள்ள லாக்டவுன் 4 மிகவும் மாறுபட்டதாக இருக்கும், மே 18ம் தேதிக்கு முன் இதற்கான விவரங்கள் வெளியிடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 2 மாதமாக கொரோனா தீவிரம் அடைந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு இந்தியாவில் வரும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருந்தது. இந்தியாவில் மொத்தம் மூன்று முறை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையிலும் இந்தியாவில் தொடர்ந்து கேஸ்கள் அதிகரித்து வருகிறது.

கடந்த வாரம் மூன்றாவதாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடி இன்று மக்கள் முன்னிலையில் பேசினார். அதில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும். லாக்டவுன் 4.0 அமல்படுத்தப்படும். ஆனால் இந்தியாவில் அமல்படுத்தப்பட உள்ள லாக்டவுன் 4 மிகவும் மாறுபட்டதாக இருக்கும். இதில் விதிமுறைகள் மிகவும் வேறுபாடுடன் இருக்கும்.

புதிய லாக்டவுன் 4.0 குறித்து மே 18-ந் தேதிக்கு முன்னர் அறிவிக்கப்படும். இது தொடர்பான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். மாநிலங்களின் பரிந்துரையின் பேரிலேயே 4ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்படும். மாநிலங்கள் கொடுக்கும் அறிவுரையின் பெயரில் புதிய லாக்டவுன் அமல்படுத்தப்படும். கொரோனா வைரஸ் நம்முடன் பல காலத்துக்கு இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் முடங்கி இருக்க முடியாது. நாம் மாஸ்க் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். நாம் இதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதனால் லாக்டவுன் 4.0 கொண்டு வரப்படுகிறது, என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள லாக்டவுன் குறித்து பிரதமர் மோடி நேற்று மாநில முதல்வர்கள் உடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில் லாக்டவுன் நீட்டிப்பு குறித்து விவாதிக்கப்ட்டது. இதையடுத்து தற்போது பிரதமர் மோடி இந்த நீட்டிப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பிரதமர் மோடி இந்த லாக்டவுன் தொடர்பான எக்சிட் பிளான் குறித்து மாநில அரசுகளிடம் அறிக்கை சமர்பிக்க கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *