நிசர்கா புயலில் சிக்கி ஆட்டம் கண்ட கப்பல்!.. வளைந்து நிமிர்த்த மரங்கள்

வீசப்படும் பலத்த காற்றால் சிக்கிய ஒரு கப்பல் மிர்யா கடற்கரையில் ஆட்டம் கண்டுள்ளது. அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த நிசர்கா புயல் தற்போது 1 மணிக்கு ராய்காட் மாவட்டத்தில் அலிபாக் அருகே கரையைக் கடக்கத் தொடங்கிவிட்டது. இந்த புயலால் மும்பைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆம்பன் புயலை போன்ற பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.

நிசர்கா புயலால் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரியில் மிர்யா கடற்கரையில் பலத்த காற்று வீசுகிறது. கப்பலும் தத்தளிக்கிறது. நிசர்கா புயல் கப்பலையே கவிழ்க்கும் அளவுக்கு காற்று பலமாக வீசி வருகிறது.

நிசர்கா புயல் கரையை கடக்கத் தொடங்கிய போது பேய்க்காற்று வீசி வருகிறது. பயங்கர காற்றால் மரங்கள், செடி போல் வளைந்து ஆடுகின்றன. நிசர்கா புயலால் காற்றில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *