பொதுத்துறை வங்கி அதிகாரிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஊதியம் மற்றும் வாடகை கொடுக்க முடியாத நிலையில் தவித்து வருகின்றன. இந்த நிலையில் அந்நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலமாக கூடுதல் கடன் வழங்கும் திட்டத்தை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே பொதுத்துறை வங்கி அதிகாரிகளுடன் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்த உள்ளார். இன்றைய ஆலோசனை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, நாடு முழுதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கால் நாடு முழுவதும் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டது.

இதனால் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கிறார்கள். சிறு, குறு நிறுவனத்தினரும் 45 நாட்களுக்கு மேல் மூடிக்கிடந்த காரணத்தால் தொழிலை மீண்டும் தொடங்க பண வசதி இல்லாமல் தவிக்கிறார்கள். ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் வாடகை கொடுக்க இயலாத நிலையில் பல நிறுவனத்தினர் உள்ளனர்.

நாட்டில் பல கோடி மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை தரும் சிறு குறு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கப்பதற்காக அரசு , பொதுத் துறை வங்கிகள் மூலமாக, அவசர கால கடனாக, 42 ஆயிரம் கோடி ரூபாயை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.. மேலும், இந்த நிறுவனங்கள், வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தவணைகளும், மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 3.2 கோடி பேர் பலன் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறு குறு மற்றும நடுத்த தொழில் துறைக்கு மேலும் சில சலுகைகளை அறிவிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போதைய நிலையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதன் செயல்பாட்டு மூலதனத்தில், 10 சதவீதத்தை வரம்பாக நிர்ணயித்து, வங்கிகள் கடன் வழங்கி வருகின்றன. இதன் வாயிலாக, அதிக பட்சமாக, 200 கோடி ரூபாய் வரை கடன் பெற இயலும். அந்த வகையில் வங்கிகள், 27 ஆயிரத்து, 426 கோடி ரூபாய் தொழில் துறையினருக்கு கடன் வழங்கி உள்ளதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *