காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ப.சிதம்பரம் அறிவிக்க வாய்ப்பு ?

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கட்சியின் தலைவர் பதவியை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் வழங்குவது பற்றி அண்மையில் தீவிர ஆலோசனை நடத்தி வருவாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறைவாசத்துக்கு பின்பு ப.சிதம்பரம் மத்திய அரசுக்கு எதிராக மிக உறுதியாக குரல் எழுப்பி வருவதுடன் மத்திய அரசுக்கு பல்வேறு வழிகளில் குடைச்சல் கொடுப்பது, பிரதமர் மோடியை நோக்கி ப.சிதம்பரம் கேள்விக்கணைகளை வீசுவதற்கு பரிசாக அவருக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வழங்க உள்ளது.

இடைக்கால தலைவராக உள்ள சோனியாகாந்தியின் உடல்நிலை முன்பை போல் கட்சிப்பணியாற்ற ஒத்துழைப்பதில்லை. வயது மூப்பின் காரணமாகவும், ஏற்கனவே அவர் செய்துகொண்ட அறுவைச் சிகிச்சையின் காரணமாகவும் அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க ராகுல் திடமாக மறுப்பதால், தற்போதைய சூழலில் ப.சிதம்பரத்திடம் இந்த பொறுப்பை ஒப்படைப்பதற்கான யோசனையில் உள்ளார் சோனியா.

காங்கிரஸ் கட்சியில் எத்தனையோ மூத்த தலைவர்களும், முன்னாள் மத்திய அமைச்சர்களும் இருக்கும் நிலையில் அவர்கள் யாரும் ப.சிதம்பரத்தை போல் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுப்பதில்லை. தொடர்ந்து பிரதமர் மோடியின் நடவடிக்கை மற்றும் மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்து கருத்து தெரிவித்து வருகிறார் ப.சிதம்பரம். குறிப்பாக திகார் சிறைவாசத்துக்கு பின்னர் மத்திய அரசை உன்னிப்பாக கவனித்து உடனுக்கு உடன் எதிர்வினை ஆற்றி வருகிறார் ப.சிதம்பரம். மேலும், பொருளாதாரம் உள்ளிட்ட பலதுறைகள் பற்றிய விவரங்களை ஆழமாக அலசி ஆராயக்கூடியவர் சிதம்பரம்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு இருந்ததை விட இப்போது முழுவீச்சில் செயல்படுவதால் சிதம்பரத்தின் நடவடிக்கைகள் ராகுல்காந்தியையும் கவர்ந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *