ஜூன் 30 வரையிலான ரயில் பயணச்சீட்டு முன்பதிவுகள் ரத்து

ஜூன் 30 வரையிலான ரயில் பயணச்சீட்டு முன்பதிவுகள் ரத்து என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 3வது கட்ட ஊரடங்கு வருகிற 17ம் தேதியுடன் முடிவடைவதால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் கடந்த 11-ம் தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியிடம் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து வேறு மாநிலங்களுக்கும் மே12 முதல் ரயில் சேவை தொடங்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.

சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் தமிழகத்திற்கு மே 31வரை விமான சேவையும், ரயில் சேவையும் தொடங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வேண்டுகோளை ஏற்று அவருக்கு, மத்திய ரயில்வே அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளார். அதில், பயணிகள் ரயில்களின் இயக்கம் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. பயணிகள் ரயில்கள், மெயில்/விரைவு ரயில்கள் மற்றும் புறநகர் ரயில்கள் ஆகிய அனைத்து வகையான ரயில்களின் இயக்கமும் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜுன் 30 வரையிலான பயணச்சீட்டு முன்பதிவுகளை ரத்து செய்யப்பட்டு, அதற்கான முழு தொகையையும் திருப்பி அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

அதே வேளையில் வெளி மாநில தொழிலாளர்களுக்காக தற்போது இயக்கப்பட்டு வரும் ‘Sharmik’ சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் இயங்கி வந்த 3,500 முன்பதிவு ரயில்கள், 4,600 முன்பதிவில்லா ரயில்கள், 5,000 மின்சார ரயில்கள் என மொத்தம் 13,100 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *