உத்தர பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 24 வெளிமாநில தொழிலாளர்கள் பலி

உத்தர பிரதேசத்தில் நடத்த சாலை விபத்தில் 24 வெளிமாநில தொழிலாளர்கள் பலியானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசத்தின் அவுரியா என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் பலர் பலியாக அவர்களுக்கு சரியான நேரத்தில் மீட்பு உதவி கிடைக்காதது தான் காரணம் எனவும் கூறப்படுகிறது .

அதிகாலை 3.30 மணிக்கு கோட்வாலி காவல் எல்லைக்குள்பட்ட மிஹாலி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் லாரி வந்த போது அங்கு நின்றுக் கொண்டிருந்த மற்றொரு லாரி மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 24 பேர் பலியாகிவிட்டனர். 20 பேர் காயமடைந்துள்ளனர்.

இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. எல்லோரும் உத்தர பிரதேச எல்லையான லக்னோ நோக்கி சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் உத்தர பிரதேசத்தில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்கள். அவுரியா என்ற பகுதிக்கு அருகே நடந்த இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

விபத்து நடந்த பகுதி அவுராவியாவிற்கு அருகே இருக்கும் நெடுஞ்சாலை பகுதியாகும். மாநில நெடுஞ்சாலை என்பதால் அந்த சாலை சரியாக பராமரிக்கப்படாமல் இருந்துள்ளது. இதுதான் விபத்துக்கு முக்கிய காரணம் என்றும் கூறுகிறார்கள். அதேபோல் அந்த சாலை மிகவும் குறுகிய சாலை ஆகும். இந்த சாலைக்கு அதிக பழக்கம் இல்லாதவர்கள் என்றால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

லாரி விபத்தில் சிக்கிய பின் அங்கு மீட்பு பணிகள் சரியாக நடக்கவில்லை. அதாவது விபத்து நடந்தது 3 மணி. அங்கு அப்போது மக்கள் யாரும் இல்லை. இரண்டு லாரியில் வந்த எல்லோரும் மோசமாக காயம் அடைந்து, உயிருக்கு போராடிக் கொண்டு இருந்துள்ளனர். ஊரடங்கு என்பதால் அந்த நேரத்தில் அங்கு வாகனங்கள் எதுவும் வரவில்லை. நீண்ட நேரமாக அவர்கள் மீட்பு பணிக்கு காத்து இருந்தனர். பலர் பலியாக அவர்களுக்கு சரியான நேரத்தில் மீட்பு உதவி கிடைக்காததும் காரணம் என கூறப்படுகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *