ஊரடங்கை மேலும் சில நாட்கள் நீட்டிக்க பிரதமரிடம் வலியுறுத்தல்

New Delhi, Nov 09 (ANI): Prime Minister Narendra Modi addresses the nation, in New Delhi on Saturday. (ANI Photo)

புதுடெல்லி

இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியதால், அதை கட்டுப்படுத்துவது தொடர்பாக மார்ச் 20ந்தேதி மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து 24ந்தேதி இரவு தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், ஏப்ரல் 14ந்தேதி வரை நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார்.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு அவர் 3 முறை முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசித்து இருக்கிறார். கடைசியாக அவர் கடந்த 11ந்தேதி முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து 14ந்தேதி, ஊரடங்கு மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.

நாடு முழுவதும் ஒரு மாதத்துக்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருப்பதால், அத்தியாவசிய சேவைகள் தவிர பிற அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன. தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு இருப்பதால் மக்கள் வேலை இல்லாமல் தவிக்கிறார்கள். இதை கருத்தில் கொண்டு கொரோனாவின் தாக்கம் அதிகம் இல்லாத பகுதிகளில் ஊரடங்கு தொடர்பான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன.

ஊரடங்கின் காரணமாக கொரோனா நோய்த்தொற்று பரவும் வேகம் குறைந்துள்ள போதிலும், அது பரவுவதை முற்றிலுமாக தடுத்துநிறுத்த முடியவில்லை.  இந்த நிலையில், ஊரடங்கு விலக்கு பற்றி காணொலி காட்சி வழியாக முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை மேற்கொள்வதற்கான கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.  இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் கலந்து கொண்டுள்ளார்.  தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழக அரசு உயரதிகாரிகள் ஆகியோரும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.  

பிரதமருடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற மாநில முதலமைச்சர்கள் ஊரடங்கை மேலும் சில நாட்கள் நீட்டிக்க வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா பாதிக்கப்படாத இடங்களில் தொழில்களை தொடங்க அனுமதிக்க கோரிக்கை வைத்து உள்ளது.

பொது முடக்கத்தை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க ஒடிசா மாநில அரசு கோரிக்கை விடுத்து உள்ளது.

ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது தளர்வு கொடுக்கலாமா என்பது பற்றி மே 3க்கு பின் அறிவிக்கப்படும் என பிரதமர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா பாதிப்பு உள்ள மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்கவும், பாதிப்பு அல்லாத பகுதிகளில் ஊரடங்கை தளர்த்த வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நோய்த்தொற்றின் பாதிப்பு தன்மையை அடிப்படையாகக் கொண்டு மாவட்டங்களை சிவப்பு, பச்சை மற்றும் ஆரஞ்சு என வரையறுப்பதன் மூலம் ஊரடங்கை தளர்த்துவதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு பிரதமர் அனைத்து மாநிலங்களையும் கேட்டுக் கொண்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் திறக்கப்பட வாய்ப்புள்ளது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர்மோடி பேசும் போது பொருளாதாரம் குறித்து கவலைப்படத் தேவையில்லை, நமது பொருளாதாரம் நன்றாக உள்ளது என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *