21 நாள் லாக்டவுன் நாள்களில் குடும்பமே சேர்ந்து கிணற்றை தோண்டி எடுத்தது சாதனை

கேரளாவில் வெள்ளத்தில் மூடிய கிணற்றை இந்த 21 நாள் லாக்டவுன் நாள்களில் குடும்பமே சேர்ந்து தோண்டி எடுத்தது சாதனை ..

கொரோனா தொற்று உலகத்தையே உலுக்கி வரும் நிலையில், பல நாடுகளில் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. மக்கள் பெரும்பாலும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை தான் உள்ளது. ஆனால் ஒரு சிலர் இந்த காலகட்டத்தை உபயோகமாக மாற்றி வருகின்றனர், அதே போல தான் கேரளாவில் ஒரு குடும்பமும் மிக உபயோகமாக ஒரு செயலை செய்து காட்டியுள்ளனர்.

கேரளா மாநிலம் கண்ணூரை மாவட்டம் பிராணயி சேர்ந்த சானுஸ் மற்றும் குடும்பத்தார் இந்த லாக்டவுன் நாள்களில் குடும்பமே சேர்ந்து கிணற்றை தோண்டி எடுக்க முடியுவ் செய்தனர். அதற்கான வேலையயையும் தொடங்கினர்.. இது தொடர்பாக சானுஸ் கூறுகையில் நாங்கள் அனைவரும் இணைத்து இந்த கிணற்றினை தோண்ட முடிவு செய்தோம், நம் வீட்டின் அருகாமையில் தான் இந்த கிணறு உள்ளது.. 22 அடி முதல் 24 அடியில் தண்ணீர் கிடைக்கும் என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் 16 முடித்து 17 வது அடியில் தண்ணீர் கிடைத்தது..

தங்களுக்கு இதில் அனுபவம் ஏதும் இல்லை என்றும், நான், என் மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் சிலருடன் இணைந்து இந்த பணியினை செய்து முடிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.. தண்ணீரை கண்டதும் பெரும் மகிழ்ச்சி அடைத்ததாகவும் தங்களின் முயற்சி வெற்றி பெற்றுள்ளதாகவும் சானுஸ் தெரிவித்தார்

சும்மா இருக்காம எவ்வளவு பெரிய வேலை பார்த்துள்ளார்கள்.. வாழ்த்துக்கள் பல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *