வாழை இலையில் சாம்பார், ரசம் கட்டலாம் வாங்க !

வாழை இலை உணவு பரிமாறும் தட்டாகவும், அலங்காரப் பொருளாகவும், படையல் விரிப்பாகவும் மற்றும் சமையலிலும் பயன்படுகிறது. உணவின் மணத்தை அதிகரிக்க வாழை இலை பயன்படுகிறது. பதார்த்தங்களுடன் வேகவைப்பதால் மெல்லிய சுவை கொடுக்கிறது. மேலும் உணவை மடித்துக் கட்டவும் பயன்படுகிறது. இலையில் உள்ள இயற்கை சாறு உணவை பாதுகாத்து சுவையையும் கூட்டுகிறது.[1] தமிழ் நாட்டில் இவ்விலையைக் காயவைத்தும் பயன்படுத்துகின்றனர்.

வாழை இலையில் எப்படி குழம்பு மாற்றும் நீர் ஆகாரங்களை கட்டி கொடுப்பது என்பது பலரின் கேள்வியாக உள்ளது இதோ இந்த காணொளியை பாருங்கள்.

பிளாஸ்டிக் கவர் பயன்படுத்துவதற்கு பதிலாக வாழையிலை பயன்படுத்தும் முறை கேரளாவில் பின்பற்றப்படுகின்றது. வாழைஇலையில் சோறு கட்டிககொடுத்துப் பார்த்திருப்போம் ஆனால், கேரளாவில் வாழை இலையில் குழம்பு, இரசம், மோர் என்று கட்டி கொடுக்கிறார்கள்.

வாழைஇலை யினை எடுத்து நன்றாக கழுவிய பின்னர் மிதமான சூட்டில் இலையின் இருபுறத்தினையும் வாட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு கப் வடிவில் இரண்டுபுறமும் மடித்து கொள்ள வேண்டும், நமக்கு குடுவை போன்ற ஒரு வடிவில் இலை கிடைக்கின்றது, இதில் நமக்கு தேவையான சாம்பார், ரசம் என எனது வேண்டுமானாலும் ஊற்றி எடுத்து செல்லலாம்.

எந்த ஒரு செயலுக்கும் பொறுமையும், நம்மண்ணின் மீதானா அக்கறையும், செய்யுற வேலைய நேசித்தலுமே போதும் எதுவும் சாத்தியம்தான்..

முயற்சி என்பது விதைபோல விதைத்துக்கொண்டே இருப்போம்.. இயற்கையோடு இணைத்து வாழ்வோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *