கடையா எப்போ சார் தொரப்பிங்க…. ஒரு குடிமகனின் கோபம்

“பிரபா ஒயின் ஷாப் ஓனரா” கடையா எப்போ சார் தொரப்பிங்க…. இப்படிக்கு ஒரு குடிமகனின்

ஒரு குடிமகனின் கோபம்

நமது நாட்டில் ஊரடங்கு அமல் படுத்த பட்டதில் இருந்து மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டது இதன் காரணமாக மது விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டது. மதுபான பிரியர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதில் ஒரு சிலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் நடந்தன. இதில் ஒரு சிலர் தவறான வழிகளில் போதை ஏற்ற நினைத்து உயிரை மாய்த்து கொண்ட சம்பவங்களும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

தமிழக அரசு மதுக்கடைகளை ஊரடங்கு தடை காலம் முடியும் வரை திறக்க போவதில்லை என உறுதியாக தெரிவித்துள்ளது .. இதனிடையே ஒரு சிலர் மதுக்கடை திறக்க கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது ..

இந்த நிலையில் குடிமகன் ஒருவர் தன்னுடைய ஆதங்கத்தினை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது ..

எங்களால் எவ்வளவு வருமானம் அரசுக்கு வருகின்றது , ஏன் எங்களை அரசு வஞ்சிக்கிறது எனவும் ஆதங்கத்துடன் கேட்கிறார்… நாங்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் தயார், தினமும் 1 நேரம் மட்டுமாவது கடை திறக்க பட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கிறார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *