நிறைவான செல்வம் பெற குரு பகவான் வழிபாடு

‘குரு இருக்கும் இடம் பாழ். பார்க்கும் இடம் விருத்தி’ என்பார்கள். அதன்படி, இவரது பார்வை நல்ல இடத்தில் அமைந்தால் எல்லா அம்சங்களும் தேடிவரும். குரு பகவான், தம்மை வழிபடுவோருக்கு நிறைவான செல்வம், உயர் பதவி, திருமணம், புத்திரப்பேறு போன்றவற்றை கொடுப்பார்.

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவைகள் இரண்டு. ஒன்று.. காசு, பணம் எனப்படும் பொருட்செல்வம். இன்னொன்று.. குழந்தைச் செல்வம். இந்த இரண்டையும் விரும்பாதவர்களே இருக்க முடியாது. தனம், புத்திர ஸ்தானங்களின் அதிபதி குருபகவான். நம் ஜாதகத்தில் குரு பலமாக இருந்தால்தான்

இந்த இரண்டும் தங்குதடையின்றி கிடைக்கும்.

வியாழக்கிழமை விரதம் இருந்து, நெய் தீபம் ஏற்றி குருவிற்குரிய மஞ்சள் வஸ்திரம், தானியம் கொண்டு வழிபடுவது நன்மைகளை தரும்.

குரு சுலோகம் :

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

குரு மந்திரம் :

தேவாணாஞ்ச ரிஷிணாஞ்ச
குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்தி பூதம் திரிலோகேஸம்
தம் நமமி பிருகஸ்பதிம்

குரு பகவான் காயத்ரி :

வருஷபத் வஜாய வித்மஹே
க்ருணீ ஹஸ்தாய தீமஹீ
தந்நோ குரு ப்ரசோதயாத்

கோசார குரு சரியில்லாமல் இருப்பது, அதாவது ஜென்ம குரு, அஷ்டம குரு, விரய குரு உள்ளவர்கள் தினமும்
‘ஓம் குரு தேவாய வித்மஹே பிரம்மானந்தாய தீமஹி தந்நோ குரு பிரசோதயாத்’ என்ற காயத்ரி மந்திரத்தை 54 முறை சொல்லி வரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *