குலதெய்வம் மற்றும் குலசாஸ்தாவை இந்த ஆண்டு எப்படி வழிபாடு செய்வது

இந்த நன்நாளில் வருஷத்துக்கு ஒருமுறை நாமெல்லாம் நம்ம குலதெய்வம் கோவிலுக்கு போய் சாமி கும்பிடுவோம்.

இந்த வருஷம் நாம எல்லாம் வெளியே போக முடியாத நிலைமையில இருக்கிறோம். இருப்பினும் நம் குலதெய்வ வழிபாட்டை நாம் மறக்காம செய்ய வேண்டும்.

குலதெய்வம் அருளால் நம்ம குடும்பம் தழைக்க, இந்த வருஷம் நம்ம வீட்டுலேயே குலதெய்வ வழிபாடு செய்யத் தயாரோவோம்

நம்ம வீடெல்லாம் முதல் (இன்று மாலையே) நாளே பெருக்கி, மெழுகி சுத்தப்படுத்தி, பூஜையறை விளக்கு மற்றும் சாமான்களை சுத்தப்படுத்திடுவோம் காலையில் வாசலிலே மாவிலை, வேப்பிலை தோரணம் கட்டி, பசுஞ்சாண நீர் அல்லது மஞ்சள் நீர் தெளித்து மாக்கோலம் இடுவோம்.

நாளை காலை நம்ம வீட்டு பூஜையறையில நம்ம குலதெய்வ, குலசாஸ்தா படங்கள் இருந்தால் அலங்காரம் பண்ணி வைச்சுக்கலாம். படங்கள் இல்லாதவர்கள், மஞ்சள் அல்லது சந்தனத்தில் குலதெய்வமாக நினைத்து பிடிச்சு வைச்சுக்கோங்க. சந்தனம் குங்குமம் வைத்த சுத்தமான ஒரு குடத்தில் நிறைகுடமாக
தண்ணிர் ஊற்றி அதில் மஞ்சள் பொடி, வெற்றிலை அல்லது வேப்பிலை போட்டு குடத்தின் மேல் முழு தேங்காய் வைத்து பூ போட்டு பூஜையறையில் விளக்கு முன் வையுங்க..

குலதெய்வம் கோவிலுக்கு போய் நாம செய்யும் பிரார்த்தனைகளை குடும்பமாய் ஒன்று கூடி, மனசார வீட்டில் செய்யுங்க

நாளை வீட்டுல சுத்த பத்தமா பச்சரிசி சாதம் வடிச்சு, சாம்பார், அவியல்னு, பொரியல், பச்சடி, கூட்டு , அப்பளம் பாயாசம் என்று வகை வகையாக சமைச்சு வீட்டுலயே படையல்
போட்டு வழிபடலாம்

முடியாதவர்கள் சக்கரை பொங்கல் அல்லது பாயாசம் (ஏதோ ஒரு இனிப்பு) வைத்தோ நம்ம வழிபாட்டை முறையாக வீட்டிலயே செய்வோம்….

குலதெய்வத்திடம் இந்த வருஷம் எங்களால கோவிலுக்கு வந்து உன்ன கும்பிடமுடியலை சாமி, அதனால வீட்டுல இருந்தே உன்ன நினைச்சு கும்பிடுறோம், எங்க குற்றம் குறைகளை எல்லாம் பொறுத்து நோய் நொடியில்லாம எங்களை காக்க வேணும்னு சொல்லி மனசார கும்பிடுங்க… முடிஞ்சா ஒரு மஞ்ச துணியில ஒரு பதினொரு ரூபாய் முடிஞ்சு வைச்சு, இந்த நோய் நொடி பரவல் எல்லாம் தீர்ந்து, மக்கள் வாழ்க்கை சகஜ நிலைமைக்கு திரும்புனா அதற்கு அடுத்த உத்திரம் நட்சத்திரத்துல (அல்லது ஒரு நல்ல நாளிலோ) உன் கோவிலுக்கு வந்து இந்த முடிஞ்சு வைச்ச பணத்தை உண்டியல்ல போட்டு, குடும்பத்தோட வந்து தரிசனம் பண்ணுறோம்னு வேண்டிக்கோங்க….

குடும்பத்தோட குலதெய்வ வழிபாட்டை செஞ்சு, கூட்டா உக்காந்து படையல் சோறு பிரசாதத்தை சாப்பிடுங்க… மறுநாள் அந்த நிறைகுடம் தண்ணீரை வீடெல்லாம் தெளிச்சுட்டு, சுத்தமான இடத்துல மரத்தடி அல்லது செடியில ஊத்திடுங்க….

குலதெய்வம் மனம் குளிர்ந்தால் நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமுமாய் வாழலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *