பௌர்ணமி பூஜை வழிபாடு மற்றும் விரத முறைகள்

பௌர்ணமி – நிலவு முழுதாக(நிறைநிலா) காட்சி தரும் நாள் . ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி வருவது வழக்கம். ஆனால் ஒவ்வொரு பெளர்ணமியும் ஒரு குறிப்பிட்ட தனி சிறப்புக்கள் உள்ளன. ஒவ்வொரு பௌர்ணமி தினமும் அம்பிகை வழிபாட்டிற்கு ஏற்றதாக பார்க்கப்படுகின்றது. அதே சமயம் ஒவ்வொரு பௌர்ணமியும் ஒரு குறிப்பிட்ட விதத்தில் அம்பிகைக்கு விரதமிருந்து வழிபடும் முறையும் உள்ளது. அப்படி உபவாசம் இருந்து அம்மனை வழிபட அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.பெரும்பாலும் நம் வீடுகளில் பெண்கள் பௌர்ணமி அன்று விரதம் இருந்து கடவுளினை வணங்குவது வழக்கம். அவ்வாறு வணங்கும் போது கடவுளின் ஆசி நமக்கு முற்றிலுமாக கிடைக்கும். இது நாம் அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒரு உண்மை.

பௌர்ணமி உருவாகிய விதம் :

ஒரு சமயம் பார்வதி தேவி தனது ஓய்வு நேரத்தில் ஒரு சித்திரம் ஒன்றை வரைந்தார். அந்த சித்திரம் அவருக்கு மிகவும் பிடித்து போக அந்த சித்திரதிற்கு உயிர் கொடுக்குமாறு தனது துணைவனான சிவபெருமானிடம் கோரிக்கை ஒன்றினை வைத்தார்.

அந்த கோரிக்கையினை ஏற்ற சிவபெருமான் அந்த சித்திரத்திற்கு உயிர் கொடுத்தார். அந்த சித்திரம் உயிர் பெற்ற நாளே சித்திரா பௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது என்று ஒரு குறிப்புண்டு. இந்த சித்திரா பௌர்ணமிக்கு மற்றொரு பெயர்காரணமும் உள்ளது. அது யாதெனில், சித்திர மாத பௌர்ணமி அன்று நீர் நிலைகளில் நிலவின் முழுவடிவமும் பிரகாசமாக தெரியும் என்பதனால் அது சித்திரா பௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது என்கிற ஒரு கருத்தும் உள்ளது.

பௌர்ணமி விரதம் :

பௌர்ணமி அன்று அதிகாலை எழுந்து குளித்து வீட்டின் வாயிலில் மாவுக்கோலம் இட்டு பூஜை செய்வது சிறந்த பலனை தரும். மேலும் தெற்கு பக்கம் பார்த்தவாறு அமைந்த பூஜை அறைகளில் மாவுக்கோலம் இட்டு அந்த மாவுக்கோலம் சித்ரகுப்தர் போன்று இருந்தால் அது மேலும் பூஜைக்கு பலம் சேர்க்கும். இவ்வாறு சித்திரகுப்தன் வடிவ கோலம் போட்டு நாம் நடத்தும் பூஜையின் பலனாக நமது பாவங்கள் அனைத்தும் நீங்கி நமக்கு புண்ணியம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மாதப்படி பௌர்ணமி வரும் நாட்கள்:

சித்திரை மாதம் – சித்திரை நட்சத்திரம்

வைகாசி மாதம் – விசாக நட்சத்திரம்

ஆனி மாதம் – மூல நட்சத்திரம்

ஆடி மாதம் – உத்திராட நட்சத்திரம்

ஆவணி மாதம் – அவிட்ட நட்சத்திரம்

புரட்டாசி மாதம் – உத்திரட்டாதி நட்சத்திரம்

ஐப்பசி மாதம் – அசுவினி நட்சத்திரம்

கார்த்திகை மாதம் – கிருத்திகை நட்சத்திரம்

மார்கழி மாதம் – திருவாதிரை நட்சத்திரம்

தை மாதம் – பூசம் நட்சத்திரம்

மாசி மாதம் – மகம் நட்சத்திரம்

பங்குனி மாதம் – உத்திரம் நட்சத்திரம்

சில மாதங்களில் மட்டும் பௌர்ணமி தினம் மாறுபடலாம்.

சிவசக்தி வழிபாடு :

சிவனின் அம்சமும் சந்திரனின் சக்தியான சூரியனை சிவசக்தி என்று அழைப்போம். பௌர்ணமி நாளில் சூரியனை வழிபடுதலையே சிவசக்தி வழிபாடு என்கிறோம். அவ்வாறு பௌர்ணமி தினத்தில் நடைபெறும் சிவசக்தி வழிபாடு மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாகவும், மேலும் சிறப்பான வழிபாடாகவும் கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *