எம்பெருமான் திருமாலின் குலதெய்வம் யார் என்று தெரிந்து கொள்வோமா !

நம்மில் பலருக்கு திருப்பதியில் உள்ள திருமால் தான் குலதெய்வம். ஆனா, அந்த வேங்கடவனுக்கே குலதெய்வம் ஸ்ரீநரசிம்மர்.

ஸ்ரீனிவாச கல்யாணத்திற்கான திருமண பத்திரிக்கையில் குலதெய்வம் என்ற காலத்தில் ‘ஸ்ரீ நரசிம்மரை’ போடுமாறு ஸ்ரீனிவாசர் கூறுகிறார்.

அன்று தயாரிக்கப்பட்ட விருந்து, ஸ்ரீ நரசிம்மருக்கு நைவேத்தியம் செய்தபிறகே அனைவரும் உண்கின்றனர். திருமணம் முடிந்த ஸ்ரீனிவாசரும், லக்‌ஷ்மி தேவியும், அஹோபிலம் சென்று ஸ்ரீ நரசிம்மரை வணங்கி வழிப்பட்டனர்.

இவ்விவரங்கள் வேங்கடேச மஹாத்மியம் என்ற நூலில் சொல்லப்பட்டுள்ளது

சத்யம் விதாதும் நிஜப்ருத்ய பாஷிதம் வ்யாப்தம்ச பூதேஷு அகிலேஷு சாத்மன அத்ருஷ்யதாத் அதியத்புத ரூபமுத்வஹன் ஸ்தம்பே சபாயாம் ந ம்ருகம் ந மானுஷம்

ஸ்ரீமத் பாகவத்தில் நரசிம்ம அவதாரத்தில் சொல்லப்பட்ட மிகமிக முக்கியமான ஸ்லோகம்.

நாராயணன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று மிக நம்பிக்கையுடன் சொன்ன தன் பக்தனான பிரஹலாதனின் வாக்கை காப்பாற்ற வேண்டி, மிருகமும் அல்லாத மனிதனும் அல்லாத ஒரு உருவத்தில் – நரசிம்மனாக – கம்பத்தில் இருந்து தோன்றினான்

மேற்கண்ட ஸ்லோகத்திற்கு இது ஒரு எளிமையான விளக்கம். ஆனால் இந்த ஒரே ஒரு ஸ்லோகத்தை வைத்தே ஒரு நாள் முழுக்க விளக்கங்களால் பரவசப்படுத்தும் உபன்யாசகர்கள் உண்டு.

ஓம் நமோ லக்ஷ்மீ ந்ருசிம்ஹாய நமஹ