கோவிலுக்கு செல்வதால் உண்டாகும் நன்மைகள்

வாரம் ஒரு முறையாவது குடும்பத்துடன் கோவிலுக்கு செல்லுங்கள். கோவிலுக்கு செல்வதால் நேர்மறையான எண்ணங்கள் உருவாகும் ,
ஒரு விதமான ஆற்றல் நமக்கு கிடைக்க வழி வகுக்கும் , மன நிம்மதி உண்டாகும், உடலும் மனமும் நல்ல நிலையை நோக்கி பயணப்படும் .

மாதம் ஒரு முறை சொந்தங்களுடன் அல்லது குழந்தைகளுடன் அல்லது நண்பர்களுடன் கோவிலுக்கு செல்லுங்கள்.

மூன்று மாதம் ஒரு முறை திருப்பதி, திருச்செந்தூர், திருக்கடையூர், திருவண்ணாமலை, குருவாயூர் அல்லது ஏதேனும் ஒரு ஸ்தலம் சென்று வாருங்கள்.

வருடத்திற்கு ஒரு முறையாவது குல தெய்வ வழிபாடு செய்யுங்கள்.

குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் ஒருவர் என்ன தான் சக்தி வாய்நத ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான். வீடு, வாசல், நிலம், நீச்சு, நகை, நட்டு இவையெல்லாம் காசிருந்தால் வாங்கமுடிந்தவை. கல்வி, பிள்ளைப் பேறு, ஆரோக்கியம், நீண்ட ஆயுள் இவைஎல்லாம் குலதெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே பெற முடியும். வீட்டில் குழந்தை இன்மை திருமணத்தடை இருந்தால் குலதெய்வ வழிபாடு சரி செய்து விடும்.

இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால், பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

மன இறுக்கங்கள் குறையும், உங்களின் மீதுள்ள வெறுப்புகள் குறையும், உங்களின் பிரச்சினைகள் பற்றி தெளிவான முடிவுக்கு நீங்கள் வர முடியும்.

அடிப்படையில் இந்துமதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது, அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம் மூலம் இறை நிலையை அடைவது. ஆனால் இந்த குலதெய்வம் மனிதன் வாழ்க்கைக்கு தேவையான பலன்களையே அளிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *