பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் போட்ட ட்விட் பெரும் பரப்பில் தமிழக அரசியல் களம்

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைவர் கலைஞரும், நானும் அவரது இல்லத்தில் ஒரு நாள் தனியாக உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு மூத்த அரசியல்வாதியின் பெயரைக் குறிப்பிட்ட கலைஞர், அவரை மட்டும் எந்த காலத்திலும் நம்பி விடாதீர்கள் என்று கூறினார் என பதிவிட்டுள்ளார். யார் அந்த தலைவர் என அனைவரும் விவாதிக்க தொடங்கியுள்ளனர்..

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களில் சமீபமாக தீவிரமாக இயங்கி வருகிறார். நாட்டின் பிரச்சனைகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் இடைவிடாமல் கருத்துகளை தெரிவித்தும் வருகிறார் டாக்டர் ராமதாஸ்.

இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் Guess Who? என்ற படத்துடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ்.

அவர் யார் என்பதை உங்களின் யூகத்துக்கே விட்டு விடுகிறேன். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பதிவிட்டிருக்கிறார். அவரது கேள்விக்கு பதிலாக பல்வேறு தலைவர்களின் பெயர்களையும் , சிலர் நீங்கள் தான் (டாக்டர் ராமதாஸ்) எனவும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருவதால் ட்விட்டர் பக்கம் அதகளமாகிக் கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *