தீவிரமாகும் தென்மேற்கு பருவ மழை, தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம்

தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக கோவை, நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல், சேலம், நாமக்கல், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுளள அறிவிப்பில். “தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். குறிப்பாக கோவை, நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல், சேலம், நாமக்கல், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 9 சென்டிமீட்டர் மழையும், கரூர் பரமத்தியில் 8 செமீ, கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, திருச்சி மாவட்டம் துவாக்குடியில் தலா 6 செமீ மழையும், தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் கன்னிமார் ஆகிய இடங்களில் 5 செமீ மழை பெய்துள்ளது.

மன்னர் வளைகுடா மற்றும் தென் தமிழக கடற்கரையோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 – 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். லட்சத்தீவு மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளில் சூறவாளி காற்று மணிக்கு 50-60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *