கோவையில் நாளைமுதல் அரசு பேருந்துகள் இயக்கம்

கோவை அரசு போக்குவரத்து கழகம் சார்பாக கோவையில் 2600 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன கோவை மாநகரில் 700 பேருந்துகள் இயக்கப்பட்டன ஊரடங்கினால் அனைத்து பேருந்துகளும் டெப்போவுக்குள் முடங்கின .ஊரடங்கு கட்டுப்பாடு தளர்த்த பட்ட நிலையில் நகர பகுதிகளில் பேருந்துகளை இயக்க அரசு எந் உத்தரவும் பிறப்பிக்கவில்லை ஆனாலும் கழக அதிகாரிகள் எநேரத்திலும் உத்தரவு வந்தாலும் பேருந்துகளை இயக்க தயாராக உள்ளனர்

இதற்கிடையே அனைத்து அரசு அலுவலகங்களும் நாளை 18.05.2020 முதல் 50% ஊழியர்களுண்டு இயங்கும் என அரசு அறிவித்துள்ளது .அதனால் கோவை மாவட்டத்தில் அரசு ஊழியர்களின் வசதிக்காக அரசு பேருந்துகளை இயக்க கோவை மாவட்ட அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது .

இது குறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறியது –
கோவையில் 539 அரசு பேருந்துகள் பயணிகளுக்காக தயார் நிலையில் உள்ளது . சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையாக 2 பேர் அமரும் இருக்கையில் ஒருவர் மட்டும் அமர வேண்டும் . அதையே சமயம் பயணக்கட்டணம் இரட்டிப்பாகலாம் .
அரசு ஊழியர்கள் பேருந்தில் பயணம் செய்ய அடையாள அட்டைகளை காண்பித்தாள் மட்டுமே பேருந்தில் அனுமதிக்கப்படுவர்

பேருந்தில் கடைபிடிக்கபடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் :
1.பயணிகள் பேருந்தில் ஏறும் முன் கைகளை நன்கு குழுவி விட்டு எற அறிவுறுத்தப்படுவர்

2. ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு முகக்கவசம் , கை கழுவும் திரவியம் வழங்கப்படும்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த மாத 1ஆம் தேதி துவங்க உள்ளதால் மாணவர்களுக்காகவும் அரசு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன

மாவட்டத்தில் பேருந்துகளை இயக்குவது குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜாமணி , கோவை அரசுபோக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் அன்பு ஆபிரகாமுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *