ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் நிலையில் தூர்வாரும் பணி தீவிரம்

ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்ற நிலையில், இப்போது தூர் வாரும் பணிகளை அறிவித்திருக்கும் தமிழக அரசு, அதனை எவ்வித முறைகேட்டுக்கும் இடம் தராமல் வெளிப்படையாகவும், கடைமடை வரை தங்கு தடையின்றி, பயன்படும் வகையிலும் போர்க்கால அடிப்படையில் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

காவிரி டெல்டா பகுதி வேளாண்மைக்கான நீர்ப்பாசனத்திற்கு மிக முக்கியமான கால்வாய் தூர் வாரும் பணிகளை அறிவித்து அந்தப் பணிகளைக் கண்காணிக்கச் சிறப்பு அதிகாரிகளையும் நியமித்திருக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி. அணை திறக்க இன்னும் 18 நாட்கள் மட்டுமே இருக்கின்ற நிலையில் அதற்குள் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள கால்வாய்கள் அனைத்தையும் தூர் வாரி, மேட்டூரில் ஜூன் 12ம் தேதி திறக்கப்படும் நீர் கடைமடைப் பகுதிக்கும் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் :

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் முழுமையாக நிறைவேற்றிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் குறுவை சாகுபடிக்கு உண்மையிலேயே கடைமடை வரை தங்கு தடையின்றி, பயன்பட்டிடும் வகையில் விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *