தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,108 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 2,599 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5,946 ஆக அதிகரித்துள்ளது.இதனால் இந்த எண்ணிக்கை இன்று 6 ஆயிரத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது. அது போல் தமிழகத்தில் மொத்த பாதிப்பில் 50 சதவீதம் பேர் சென்னை மாநகராட்சியை சேர்ந்தவர்களாவர்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

*15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 1,047 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

*திரு.வி.க.நகரில் 737 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 919 பேருக்கும், அண்ணாநகரில் 493 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

*தண்டையார்பேட்டையில் 474 பேரும், தேனாம்பேட்டையில் 640 பேரும், திருவொற்றியூரில் 133 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

*வளசரவாக்கத்தில் 483 பேருக்கும், பெருங்குடியில் 77 பேருக்கும், அடையாறில் 316 பேருக்கும், அம்பத்தூரில் 285 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

*ஆலந்தூரில் 71 பேருக்கும், மாதவரத்தில் 92 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 74 பேருக்கும், மணலியில் 79 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

மேற்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் பகுதிகளில் கடந்த சில தினங்களாக புதிய தொற்று இல்லாமல் இருப்பது சற்று ஆறுதலாக உள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *