விற்பனை சரிவு, போதிய வருமானம் இல்லாததால் சேல்ஸ் குறைவா?

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை கிடுகிடுவென குறைந்து விட்டது. நேற்று (புதன்கிழமை) தமிழகம் முழுவதும் மொத்தம் ரூ.98.5 கோடிக்கு அதாவது 100 கோடிக்கு கீழ் மதுவிற்பனை நடந்துள்ளது. 41 நாட்களுக்கு மே 7ம் தேதி மதுக்கடைகள் தமிழகத்தில் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் அதிக அளவில் குடிமகன்கள் கூடினர். மே 7 மற்றும் மே 8 ஆகிய இரு நாட்களில் மட்டுமே மதுக்கடைகள் இயங்கியது. இரு நாளில் மட்டும் 290 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே உயர்நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்ட மதுக்கடைகள் உச்ச நீதிமன்ற உத்தரவால் கடந்த மே 16 தேதியன்று திறக்கப்பட்டது. முதல் நாள் ரூ.163.5 கோடிக்கும், அடுத்த நாளான ஞாயிறு அன்று ரூ.133 கோடிக்கும் மதுவிற்பனையானது. இதனால் உற்சாகம் அடைந்த டாஸ்மாக் நிறுவனம் டாஸ்மாக் கடைகளின் திறப்பு நேரத்தை 2 மணி நேரம் கூடுதலாக இரவு 7 மணி வரை அதிகரித்தது.

ஆனால் இந்த அறிவிப்பின் படி மதுக்கடைகள் நேரம் நீட்டிக்கப்பட்ட போதிலும் 3 வது நாள் ரூ.100 கோடிக்கு மட்டுமே மது விற்பனையானதாக கூறப்படுகிறது. அதன்பிறகு நான்காவது நாளில் 94 கோடிக்கும், நேற்று ரூ.98.5 கோடிக்கு மட்டுமே மதுபானங்கள் விற்பனையானதாக கூறப்படுகிறது. மதுவை தயாரிக்கும் ஆலைகள் குறைந்த அளவே மதுபானங்கள் உற்பத்தி செய்யும் நிலையில் உள்ளூர் மதுபானங்களுக்கு தட்டுப்பாடு இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் ஒட்டுமொத்தமாக மக்களிடம் பணப்புழக்கம் குறைந்துள்ளதால் டாஸ்மாக்கில் மதுபானங்கள விற்பனை 100 கோடிக்கும கீழாக சரிந்துள்ளது. பல டாஸ்மாக் கடைகள் வாடிக்கையாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. பார்கள் மூடப்பட்டுள்ளதும், மதுபானங்களின் விலை உயர்வும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *