ட்விட்டரில் கலக்கிய முதல்வர்.. உடனடியாக நடவடிக்கை எடுத்த பீலா ராஜேஷ்

ஐயா.. எனக்கு கொரோனா.. நெஞ்சு வலிக்குது.. டாக்டர்கிட்ட போனால் திட்டி அனுப்பிடறாங்க.. டெஸ்ட் செய்ய உதவுங்கள், இல்லைனா தற்கொலைதான்” என்று இளைஞர் ஒருவர் முதல்வருக்கு ட்விட்டரில் கோரிக்கை விடுத்திருந்தார்.. இதற்கு எடப்பாடியார், “கவலைப்பட வேண்டாம் தம்பி… விஜயபாஸ்கர், அவருக்கு உதவுங்கள்” என்று சுகாதாரத்துறை அமைச்சருக்கு உத்தரவிட அதன்படியே நடவடிக்கையும் எடுக்கப்பட்டுவிட்டது. கொரோனாவைரஸ் பரவல் தமிழகத்தில் ஊடுருவதற்கு முன்பிருந்தே தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. தீவிர தடுப்பு நடவடிக்கையை கையில் எடுத்து 144 உத்தரவையும் பிறப்பித்தது.

தற்போது இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர், சில தளர்வுகளையும் பிறப்பித்து வருகிறார்.. நேரடி ஆய்வு, ஆலோசனை கூட்டம் என றெக்கை கட்டி பறந்து ஒவ்வொன்றையும் மிக மிக கவனமாக கையாண்டு வருகிறார். இதை தவிர, மணிக்கொருதரம் கொரோனாவைரஸ் குறித்த விவரங்கள், தகவல்கள், அறிவிப்புகள், அட்வைஸ்களை தன்னுடைய ட்விட்டரிலும் பதிவிட்டு வருகிறார். இதனால் ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கிறார்!! பெரும்பாலும் முதல்வரின் அறிவுரை, யாரும் வீட்டைவிட்டு வெளியே வராதீங்க என்பதிலும், அவர்களின் நலன் சார்ந்த அறிவுரைகளாகவுமே இருக்கிறது. யார் எந்த உதவி கேட்டாலும் அதற்கு செவிசாய்த்து, உடனடியாக நடவடிக்கையும் எடுத்து அசர வைத்து வருகிறார் முதல்வர்.

அந்த வகையில் பாலா இந்தியா என்ற கணக்கில் இருந்து, இளைஞர் ஒருவர் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில் “என் அப்பா கேரளா சென்று வந்தார்.. எனக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருக்கு. நெஞ்சுவலியால் ரொம்ப கஷ்டப்படறேன் மருத்துவரிடம் சென்றால் திட்டி அனுப்பிடறாங்க.. வைரஸ் பரிசோதனை செய்து கொள்ள உதவும் Edappadi ஐயா, இல்லைனா தற்கொலை தான் முடிவு 9344017204” என்று பதிவிட்டிருந்தார். இதற்கு முதல்வர், “கவலைப்பட வேண்டாம் தம்பி” என்று பதிவிட்டதுடன், உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோரை டேக் செய்து உத்தரவிட்டுள்ளார்.

எடப்பாடியாரின் இந்த உத்தரவின்பேரில் சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு விட்டது… சம்பந்தப்பட்டவர் செல்போன் எண்ணை பதிவிட்டிருந்ததால், அந்த நம்பருக்கு பேசியுள்ளனர்.. இதை பற்றி பீலா ராஜேஷ் சொல்லும்போது, “அவர் கடலூரைச் சேர்ந்தவர்… உடனடியாக அவருக்குச் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார். இதையடுத்து தற்கொலை வரை செல்வதாக சொன்ன இளைஞரை மீட்ட முதல்வருக்கும், சுகாதாரத் துறை செயலாளருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *