தேசிய E – PASS மத்திய அரசு அறிமுகம்

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய தேவைக்காக மாநிலம் விட்டு மாநிலம் பயணம் மேற்கொள்வோருக்கு தேசிய E – PASS திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் படி, முதற்கட்டமாக 17 மாநிலங்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா , கர்நாடகம், கேரளம், மராட்டியம், ஒடிசா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அடங்கும். இந்த E – பாஸை பெறுவதற்கு serviceonline.gov.in/epass என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மாணவர்கள், அத்தியாவசிய சேவை வழங்குபவர்கள், சுற்றுலா பயணிகள்,ஆன்மிக பயணம் மேற்கொள்வோர் மற்றும் திருமணம் காரியங்களுக்கு செல்வோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பிக்கும் நபர் தனது பெயர், முகவரி அடங்கிய ஆவணங்களின் ஸ்கேன் நகல்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.தனி நபர்களோ, குழு வாகவோ விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இ -பாஸில் விண்ணப்பதாரரின் பெயர், முகவரி மற்றும் கியூ ஆர் கோடு ஆகியவை இடம்பெற்று இருக்கும். ஆனால் மாநிலங்களுக்குள் பயணம் மேற்கொள்ள அந்தந்த மாநிலங்கள் வழிகாட்டு நெறிமுறைகளை இதுவரை வகுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

E – பாஸ் அனுமதி பெரும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *