தென்னிந்தியாவின் சீராப்புஞ்சி – வால்ப்பாறை

valparai

தென்னிந்தியாவின் சீராப்புஞ்சி’ என்று வால்ப்பாறை மலை அழைக்கப்படுகிறது. தமிழகத்தின் மிக அழகிய மலைப்பிரதேசங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் வால்ப்பாறை, கடல் மட்டத்தில் இருந்து 3500 அடி உயரத்தில் ஆணைமலை மலைத்தொடரின் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. வால்ப்பாறையில் முதன் முதலில் மனிதன் குடிபுகுந்து 170 ஆண்டுகள் நிறைவு அடைந்த பிறகும், இந்த மலைப்பிரதேசத்தின் கீழ் வரும் பெரும்பான்மையான மலை இடங்கள் இன்னும் மக்கள் வசிப்பதற்கு உகந்ததாக இல்லை. அடர்ந்த காடுகள், காட்டு அருவிகள் மற்றும் மெல்லிய ஓசையெழுப்பும் ஓடைகளுடன் தேனீர் மற்றும் காபி தோட்டங்களும் இந்த மலைப்பிரதேசத்தில் காணப்படுகின்றன.சத்தமில்லமல் இரத்தம் குடித்துவிட்டு நகரமுடியாமல் செல்லும் அட்டை பூச்சிகள் அதிகம் கொண்ட பகுதி .

வால்ப்பாறை மலைப்பிரதேசம் பல்வேறு வியூ பாயிண்ட்டுகளை கொண்ட இடம். அப்படி பொள்ளாச்சியிலிருந்து வால்ப்பாறைக்கு செல்லும் மலைப்பாதையில் 9-வது கொண்டை ஊசி வளைவில் அமைந்துள்ள லோம்ஸ் வியூ பாயிண்ட் மிகவும் பிரபலமானது. அதேபோல வால்ப்பாறையின் சங்கிலி சாலை அருகேயுள்ள நல்லமுடி பூஞ்சோலை, கடம்பாறை அணை, நம்பர் பாறை ஆகியவை வால்ப்பாறையிலும் அதைச் சுற்றிலும் அமையப்பெற்றுள்ள மற்ற வியூ பாயிண்ட்டுகள் ஆகும்.

வால்ப்பாறையில் இருந்து ஆழியாறு வரை ஏறத்தாழ 40 கொண்டை ஊசி வளைவுகள் இருக்கின்றன. வால்ப்பாறையிலிருந்து 65 கி.மீ. தொலைவில் பொள்ளாச்சி நகரம் அமைந்துள்ளது. அதோடு கோயம்புத்தூர் வால்ப்பாறையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

வால்ப்பாறை சுற்றிலும் இருக்கும் சுற்றுலா தளங்கள்

வால்ப்பாறையின் முக்கியமான சுற்றுலா அம்சங்களாக சின்னக்காலர் அருவி, நீரார் அணை, கணபதி கோவில், அன்னை வேளாங்கன்னி ஆலயம், சோலையார் அணை, புல் குன்று ஆகியவை அறியப்படுகின்றன. ஆனால் பெரும்பான்மையான காட்டுப் பகுதிகள் இன்னும் சுற்றுலாப் பயணிகளால் அணுக முடியாத இடத்தில் இருக்கின்றன. இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயத்தின் ஒரு பகுதியான சின்னக்கல்லாரை இதற்கு ஒரு உதாரணம். இவ்விடம் தோட்டங்களுக்கும், தேனீர் தொழிற்சாலைகளுக்கும், அணைகளுக்கும் பெயர்பெற்றதாக இருக்கின்றது.

தேனீர் தோட்டங்களின் வழியாக காலையில் நடைபயில்வது உங்கள் ஆன்மாவை இயற்கையின் மடியில் விழித்தெழச் செய்யும் அற்புத உணர்வு. இவ்விடத்தின் காட்டு வாழ்க்கையும், இயற்கை அழகும் புகைப்பட ஆர்வலர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

சின்னக்கல்லார் :

மலைப் பிரதேசமான வால்பாறையில் அமைந்துள்ள சிறப்பான அருவி சின்னக்கல்லார் ஆகும். இங்கு ஆண்டு தோறும் சமமான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இங்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு ஒரு காரணம் இந்த அருவியும் ஆகும். அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் நடந்து சென்று இந்த அருவியை காண்பது மிகவும் அலாதியான சுற்றுலா ஆகும். இதை சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புகின்றனர்.

சோலையாறு அணை :

ஆசியாவிலேயே இரண்டாவது ஆழமான மேல் அணை சோலையார் அணை ஆகும். இதுவால்பாறையிலிருந்து 20 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது.

சுற்றுலா பயணிகள் சோலையாறு அணையின் பிரம்மாண்டமான தோற்றத்தையும், பீரிட்டு வரும் நீரையும் பார்ப்பதற்கு வருகை தருகிறார்கள். அது அவர்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக அமைகிறது.

ஆண்டு தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சோலையாறு அணைப் பகுதியின் அமைதியான இருப்பிடத்தின் காரணமாக வந்து செல்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *