சற்றுமுன் கோவையில் பலத்த மழை

கோவை நகரில் சற்று முன் சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது . இதனால் கோவை டவுன் ஹாலில் உள்ள போக்குவரத்து சிக்னல் கம்பங்கள் சாய்ந்தன ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததால் பெரும் விபத்துகள் தவிர்க்கப்பட்டது
கோவை நகரின் மத்திய பகுதியான ராம் நகரில் மரங்கள் சாய்ந்திருப்பதை படத்தில் காணலாம்

மேலும் நகரின் பல இடங்களில் பலத்த காற்றின் காரணமாக இது போன்ற நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளன

இதேபோல்
கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதியான காரமடை மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில்
நேற்று மாலை பெய்த பலத்த மழையினால் 1000கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *